தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் ஒப்புதல்.!
மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா நிறைவேறியதை அடுத்து மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்திருந்தது. இதையடுத்து கடந்த 19ம் தேதி மக்களவையில். 7 பட்டியலின உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரை அழைப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையை […]