தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை SC பட்டியலில் இருந்து நீக்கி பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தனர்.பிரதமர் மோடியும் இது தொடர்பாக பரிசீலிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பால் குர்ஜார் தெரிவிக்கையில் , இது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து முறையான தகவல் வரவில்லை இது குறித்து மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம்.கடந்த 3 ஆண்டுகளாக தமக்கு இது தொடர்பாக எந்த கோரிக்கைகளும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.