இன்று கூடும் நாடாளுமன்றம்.. இலங்கை துணை சபாநாயகர் ராஜினாமா ஏற்க மறுப்பு!
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. இலங்கையில் நேற்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக துணை சபாநாயகர் ரஞ்சித் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இலங்கையில் துணை சபாநாயகர் ரஞ்சித் ராஜினாமாவை ஏற்க அதிபர் கோட்டாபய ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கூட்டம் நடப்பதால் துணை சபாநாயகரின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனிடையே, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவைகள் பற்றி […]