கூட்டுறவு சங்கங்களின் 26 துணை பதிவாளர்களை பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 26 துணை பதிவாளர்களை பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விடுப்பு ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.