புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ஆவணங்கள் இன்று முதல் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதனால்,அரசு சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகமும் தங்கள் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன்மூலம்,தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. ஆனால்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. […]
புதுச்சேரி அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்வானது இன்று நடைபெற்றது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து,என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்கள் மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார்.ஆனால்,என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே சபாநாயகர் பதவி மற்றும் அமைச்சர் பங்கீட்டில் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் […]
50 நாட்களுக்குப் பிறகு,புதுச்சேரி அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை,அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள்,துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் இன்று கொடுத்துள்ளார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். பின்னர்,என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இதனையடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை […]