சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே விசிக, காங்கிரஸ், பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இந்த முழக்கத்தை முன்வைத்து வருகின்றனர். இதில் ஒருபடி மேலே சென்று, காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ஷெரிப், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பேருந்தைக்கு ஒட்டிய பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரில் ‘ 2026 துணை முதலமைச்சர்’ என பதிவிட்டு பதற்றத்தை கிளப்பியுள்ளார். […]