அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க பள்ளி கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக சீர்திருத்த காரணத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் தர காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததால் சுமார் 20,000 பேர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் […]
வரும் 30-ம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் செயல்பாடு பற்றி விவாதிக்க ஏதுவாக வரும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் நடைபெறுகிறது. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முதன்மை […]
உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத ஒவ்வொரு மாணவரையும் தொடர்புகொண்டு வழிகாட்டுதல்கள் வழங்க பள்ளிகவித்துறை திட்டம். பிளஸ் 2 முடித்து 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பதால், உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 2021-2022-ம் கல்வியாண்டில் அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு முடித்த 79,762 பேரில் 8,588 பேர் எவ்வித உயர்கல்வி படிப்புகளிலும் சேரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே […]
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்ற 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மே மாதம் 5 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில்,கடந்த மே 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.இந்நிலையில்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 2,25,534 மாணவர்கள்,11 ஆம் வகுப்பு தேர்வை 2,58,641 மாணவர்கள்,12 ஆம் வகுப்பு தேர்வை 1,95,292 மாணவர்கள் என மொத்தம் […]
ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை. புதிய பைக், கார் வாங்கவும் திருமணம் செய்யவும் அரசின் கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த கடனுதவி திட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.