தமிழகத்தில் அனைத்துத் துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை. அனைத்துத் துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னையில் தலைமை செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்குவர் என்றும் தகவல் கூறப்படுகிறது.