அதிக கட்டணம் வசூலித்ததாக 49 ஆம்னி பேருந்துகளுக்கு 92,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விடுமுறை காலம் வந்தாலே, தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை தனியார் பேருந்துகளுக்கு அறிவுறுத்த ஆரம்பித்து விடும். அதையும் மீறி ஒரு சில தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாக இருந்து தான் வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கியதும் விடுமுறைக்கு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுக்கு தனியார் பேருந்துகளில் […]
ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தவே கூடாது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழக போக்குவரத்துத்துறை பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அறிவித்துள்ளனர். பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர்கள் கட்டாயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநரின் செல்போனை நடத்துநரிடம் கொடுத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் உரிமத்தை கையில் வைத்திருக்கவேண்டும் என்றும், இவற்றை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வுக்கு வரும்பொழுது காட்டுவதற்காக இவற்றை கடைபிடிக்க வேண்டு […]
நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கிராமப்புறங்களில் பொதுமக்கள் எளிதில் ஓட்டுநர் உரிமம் பெற முகாம்கள் அமைக்கப்பட்டு 300 மேற்பட்டோருக்கு ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் முத்துசுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.