சென்னையில் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் கடந்த 27ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் குறைத்து வழங்குபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 6வது ஊதிய குழு அடிப்படியில் மே 2009 முன்பு வேலைக்கு சேர்ந்தவர்களுக்கும், […]
ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு உள்ள சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் தேர்ச்சி எனும் சான்று வாங்கிய மாணவர்கள் தற்போது 12ஆம் வகுப்பு முடித்து ஐஐடி கல்லூரியில் சேருவதற்கு எழுதும் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை எழுந்துள்ளது. ஏனென்றால், தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத 10ஆம் வகுப்பு […]
தனியார் பள்ளிகளில் கட்டமின்றி எல்.கே.ஜி வகுப்புகளில் சேர்வதற்கு 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு ஒதுக்கிய 25 சதவீத இடங்களில் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஸ். இதன் மூலமாக சேரக்கூடிய மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்க முடியும். இந்நிலையில் தற்பொழுதும் தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்புகளில் இலவசமாக […]
பள்ளிகளில் சமீப நாட்களாக ஆசிரியர்களுக்கு மாணவர்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்களை தடுக்க தற்போது பள்ளிக்கல்வித்துறை அனைத்தும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பள்ளி கல்வித்துறை உத்தரவு பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனை தவிர்ப்பதற்கு பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்க […]
பள்ளிக்கல்வித்துறையில், 2 இயக்குனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாலும், பள்ளிக்கல்வித்துறை தங்களது பணிகளை திறம்பட வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையில், 2 இயக்குனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் நிறுவன இயக்குனர் நாகராஜா முருகன், பாடநூல்கழக செயலாளராகவும், பாடநூல் கழக செயலாளர் லதா, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10 -ம் வகுப்பு மாணவர்களை போல, தனித்தேர்வர்களையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வரும் நிலையில், பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பரவிவரும் சூழலில், அக். […]