ஆன்மீக சுற்றுலா : சென்னை, தஞ்சாவூர். கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு நடைபெறும் ஆடி மாத அம்மன் திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள், அதாவது 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கையின் விவாதத்தில் […]
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஜூலை 2022 நிலையில் 5 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக பணிபுரியும் தினக்கூலி தொகுப்பூதிய பணியாளர்களின் பணியினை வரன்முறை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் 31.07.2021 அன்று தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாகப் பணிபுரியும் தினக்கூலி/ தொகுப்பூதிய பணியாளர்களின் பணியினை வரன்முறை செய்திட ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் தகுதியான தற்காலிக பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டு […]
தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகள் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்கள் அனைத்திலும், பின்பற்றப்படும் ஆகம விதிகள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் வினா படிவம் ஒன்று இணைக்கப்பட்டு இருக்கும். அதில், கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்து […]