சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகை, கொடைக்கானல், தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 19 ஆம் தேதி) முதல் (மே 21 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் […]