திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் 25 வருடங்கள் ஆட்சியில் இருந்த இடது முன்னணி அரசை பிஜேபி கூட்டணி வென்றதை அடுத்து அங்கு உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வீடு மற்றும் அலுவலம் ஆகியவையும் கடுமையாக தாக்கப்பட்டன. மேலும் அம்மாநிலத்தில் இருந்த ரஷ்ய புரட்சியாளன், மாமேதை லெனின் சிலை ஜேசிபி கொண்டு உடைக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூரில் திரிபுராமாநில வன்முறையை கண்டித்து இடதுசாரி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.மேலும் இங்கு பலர் கலந்து கொண்டனர்.