முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதி அனுமத்திக்கப்பட்டார். தங்கமணிக்கு விரிவான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மழை காலம் என்பதால் அரசு சார்பில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் 10 வயது சிறுவன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பம் ஜேஜே நகரை சேர்ந்தவர் புவியரசன். இவரது மகன் சக்தி […]
காய்ச்சல், உடல் வலி, தலை வலி இருந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை 965 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் நன்றாக இருக்கிறார்கள். இந்த காய்ச்சலால் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை. மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்ப […]
அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல். வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது […]
கொரோனா வைரசின் தாக்கம் தற்போதும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசு பலக்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் வானிலையால் கொரோனா தொற்றுடன் வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல், மலேரியா மற்றும் டெங்கு போன்ற பருவகால நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. இதற்கு முன் ஐதராபாத்தின் சில நர்சிங்ஹோம்கள் மற்றும் கிளிக்குகளில் மலேரியா, டெங்கு பருவகால நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் […]
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டில்லி துணை முதல்வர் மணீஷ்சிசோடியாவுக்கு டெங்கு பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது . டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கடந்த செப் 14ந்தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.இந்நிலையில் தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.அதன் பிறகு திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த புதன் கிழமை டில்லி லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா பாதித்த அவருக்கு டெங்குவாளும் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் அவருடைய உடல்நிலை சீராக […]
டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் அவற்றை பரப்ப காரணமாக இருக்கும் பெரிய கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனாவின் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. எனவே டெங்கு , மலேரியா, சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பதற்பான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில் பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள், கடைகள், ஓட்டல்கள், […]
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் .போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். தீபாவளியை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான சிறப்பு அறைகள் அமைக்கப்பட்டு, கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
குட்காவில் காட்டிய தீவிரத்தை டெங்குவில் அமைச்சர் விஜயபாஸ்கர் காட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.அரசு இன்னமும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது. தமிழகம் முழுவதும் 2000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவர்கள் கூட இறந்திருப்பது வேதனையாக உள்ளது . எனவே அரசு முழு […]
10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வட சென்னை, வேலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. சென்னையில் 100-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகம் முழுவதும் 3,500க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.