தமிழகத்தில் இதுவரை நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,266 ஆக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே, 572 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் முடிந்து, மழை காலம் ஆரம்பித்த உடன் கொசுக்களின் மீதான பயமும், அதன் மூலம் வரும் உடல்நலக்குறைவு, காய்ச்சல் என்றும் பயம் அதிகரித்து விடுகிறது. குறிப்பாக டெங்கு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. வெகு நாட்கள் கிடப்பில் இருக்கும் தேவையற்ற பொருட்களில் தேங்கும் மழைநீரில் உருவாகும் ஏடிஸ்-எஜிப்டி கொசு வகையினால் இந்த […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக பல்லகிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் […]
டெங்கு தடுப்பு பணியில் சென்னை மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. கொசுக்கள் வளரும் வகையில் தண்ணீர் தேக்கம் இருந்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கொசுக்கள் வளரும் விதமாக தண்ணீர் தேங்கி இடங்களை கண்டால் அவற்றிற்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அபராதம் ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை விதிக்கப்படும். அதனால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு […]
குட்காவில் காட்டிய தீவிரத்தை டெங்குவில் அமைச்சர் விஜயபாஸ்கர் காட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.அரசு இன்னமும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது. தமிழகம் முழுவதும் 2000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவர்கள் கூட இறந்திருப்பது வேதனையாக உள்ளது . எனவே அரசு முழு […]
பேனர் விவகாரத்திற்கு நீதிமன்றம் சென்ற தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் செல்லவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.இதன் பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலை மர்ம காய்ச்சல் என்று அரசு கூறி வருகிறது.இதுவரை 31 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுத உள்ளோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் காய்ச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன.நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமைக்கு […]
தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு அதிகளவு இருந்து வந்த நிலையில் தற்போது இழப்பீடு வழங்குவது குறித்து பதில் அளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு . தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 46 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்குவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பதிலளிக்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. source: dinasuvadu.com