டெல்லியில் UPSC தேர்வர்கள் வயது தளர்வு கோரி ஆர்ப்பாட்டம். யுபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசு பணி தேர்வர்கள் நீதி கேட்டு டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளனர். தேர்வெழுதும் இறுதி வாய்ப்பை கொரோனவால் இழந்ததால் மறுவாய்ப்பை வயது தளர்வுடன் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் உள்ள பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் மத்திய அரசை கண்டித்து யுபிஎஸ்சி தேர்வர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனிடையே, கடந்த ஐந்து ஆண்டுகளில் UPSC, SSC மற்றும் RRB களால் 3.77 லட்சத்திற்கும் அதிகமான […]
இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்து மதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைக்கோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தி திணிப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும், அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்ககோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல,மொழி திணிப்புக்கு தான் எதிரி, இந்தியை இங்கு திணிக்க […]
மீனவர்களை கொன்ற இலங்கை அரசை கண்டிக்காதது ஏன் என சென்னை ராயபுரத்தில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இராமேஸ்வரம் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஈவு இரக்கமின்றி கொலை செய்திருந்தனர். கடந்த சில நாட்களாக இலங்கை அரசின் இந்த மனிதநேயமற்ற செயலை கண்டித்து பலரும் தமிழகத்தில் குரல் எழுப்பி வருகின்றனர், பல மாவட்டங்களில் இலங்கை கடற்படையினருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது. ஆனால், மத்திய மற்றும் […]
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் வேல்முருகன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது, தமிழக வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்வைத்து சமூக இடைவெளியுடன் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசு பணிகளை 100% தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், தமிழகத்தில் தமிழர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்றும் வடமாநிலத்தை சேர்ந்த இந்தியை தாய் மொழியாக […]
திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் 25 வருடங்கள் ஆட்சியில் இருந்த இடது முன்னணி அரசை பிஜேபி கூட்டணி வென்றதை அடுத்து அங்கு உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வீடு மற்றும் அலுவலம் ஆகியவையும் கடுமையாக தாக்கப்பட்டன. மேலும் அம்மாநிலத்தில் இருந்த ரஷ்ய புரட்சியாளன், மாமேதை லெனின் சிலை ஜேசிபி கொண்டு உடைக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூரில் திரிபுராமாநில வன்முறையை கண்டித்து இடதுசாரி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.மேலும் இங்கு பலர் கலந்து கொண்டனர்.