இந்தியாவில் 500, 10௦0 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது. ஆனால் ஆர்.பி.ஐ மற்றும் நேபாளத்தின் தேசிய வங்கியான நேபாளம் ராஷ்டிரா வங்கியும் இணைந்து இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கின்றனர். இதனால் அங்கு இன்னும் இந்த 500, 1000 நோட்டுக்கள் தடை செய்யப்படாமல் இருக்கின்றன. அங்கு இந்த நோட்டுக்கள் இன்னும் கேசினோக்களில் பயன்படுத்தபடுகின்றன. இந்த கேசினோக்களில் ரூ.500 கொடுத்தால் அங்குள்ள மதிப்ப்புக்கு 50% கழித்துக்கொண்டு ரூ.400 கொடுகின்றனர். […]
உற்பத்தி துறையின் வளர்ச்சியானது, நவம்பர் மாதம் அதிகரித்து காணபடுகிறது. கடந்தாண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் தற்போது வளர்ச்சி வேகமாக உள்ளது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் உற்பத்தி துறையில் தேக்கம் இருந்தது. இருப்பினும் புதிய ஒப்பந்தங்கள் காரணமாக உற்பத்தித் துறை வேகமாக தேக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளது. தேவைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக உற்பத்தி துறையின் வளர்ச்சி தொடர்ந்து நான்கு மாதங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. […]
மகாராஷ்டிரா:கடந்த வருடம் பணமதிப்பிளப்பு(demonetised currency notes) நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட சுமார் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த 5 பேர் தானே அருகே கைது செய்யப்பட்டுள்ளனர் என மும்பை வருமான வரித் துறை தெரிவித்தனர்.மேலும் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.