தமிழகத்தில் 20,453 குடியிருப்புகள் தரமற்றவை – உடனே இடிக்க அரசின் குழு பரிந்துரை

தமிழகத்தில் உள்ள 22,271 குடியிருப்புகளில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால்,அவற்றை உடனடியாக இடிக்க அரசின் குழு பரிந்துரைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததையடுத்து,தமிழகத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசால் தொழில்நுட்ப வல்லுநர் குழு நியமிக்கப்பட்டு,கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள 22,271 குடியிருப்புகளில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால்,அவற்றை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள அரசின் தொழில்நுட்ப வல்லுநர் … Read more

மதுரையில் கட்டிடம் இடிக்கும் பணியின் போது கட்டிடம் விழுந்ததில் இருவர் உயிரிழப்பு!

மதுரையில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது, அங்கு பணியாற்றிய வேலையாட்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர். மதுரையில்  கட்டிடம் ஒன்றை இடித்து விட்டு அவ்விடத்தில் மற்றொரு கட்டிடம் கட்டுவதற்காக பணியாட்கள் நியமிக்கப்பட்டு கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியின் போது வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. மூவர் மீது கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். … Read more

வீடியோ: ஆடம்பர அடுக்குமாடி கட்டடங்களை வெடிகுண்டு வைத்து இடித்த சம்பவம்.!

கேரள மாநிலம் 4 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது.  இன்று காலை 11 மணியளவில் அடுத்தடுத்து 2 கட்டிடங்கள் வெடி வைத்து இடிக்கப்பட்டன, நாளை காலை 11 மணியளவில் மேலும் 2 கட்டிடங்களும் இடிக்கப்படவுள்ளது. கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள மராடு என்ற பகுதியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட எச்2ஓ ஹோலிபெயித், ஆல்பா ஷெரின், ஜெயின் கோரல்கோவ், கோல்டன் காயலோரம் என்ற 4 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு … Read more

வரலாற்றில் இன்று(டிசம்பர் 06) -பாபர் மசூதி இடிப்பு தினம்..!

அயோத்தி நகரம் இராமர் பிறந்த இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.1528-ம் ஆண்டு முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் ஒரு மசூதி கட்டப்பட்டது. அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்கள் நம்புகின்றனர்.பல ஆண்டுகளாக இவ்விடம் இந்துக்களாலும் , இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி வழக்குகள் தொடர்ந்தன. பாரதிய … Read more