சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடங்கியிருக்கிறது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு […]