இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 2-ஆம் தேதி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் ஏதும் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையெடுத்து டெல்லி கலவரம் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என சர்ச்சைக்குரிய வகையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷெரீப் தனது டுவிட்டரில் பதிவிட்டார். பின்னர் டெல்லியில் உள்ள ஈரான் தூதர் அலி செகனி வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு இந்தியா […]
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிவுறுத்தியதாக தெரிவித்தார். வன்முறையை கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.
டெல்லி வன்முறையில் உயிரிழந்த உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் .மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது.இந்நிலையில் இன்று 2-வது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.எனவே நாடாளுமன்ற வளாகத்தில் டெல்லி வன்முறையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 148 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.