டெல்லியிலுள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் வைத்து இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உச்சநீதிமன்றத்தின் முன்பு இன்று காலை ஒரு ஆணும் பெண்ணும் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. பகவான்தாஸ் சாலையில் உள்ள இந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை கண்ட பாதுகாப்பு போலீசார் உடனடியாக போர்வையைக் கொண்டு தீயை அணைத்துள்ளனர். அதன் பின்பு அவர்கள் இருவரும் ராம் மனோகர் லோஹியா எனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் எதனால் […]