தேசிய தலைநகரான டெல்லியில் எஸ்யூவி மோதியதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 24ம் தேதி அதிகாலை 1 மணியளவில் கன்னாட் பிளேஸ் மார்க்கெட் பகுதியில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பணியை செய்துகொண்டிருந்துள்ளார். கானாட் பிளேஸ் பகுதியில் சோதனை செய்துகொண்டிருக்கும் போது, போலீஸ் அதிகாரி பேரிகேடு அருகே நின்று ஒரு காரில் இருக்கும் நபருடன் பேசிகொண்டுள்ளார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த எஸ்யூவி கார், அவர் மீது […]
டெல்லியில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து வைத்து இருந்தது. இந்த வழக்கின் கீழ் கடந்த 2021ஆம் ஆண்டு அமலாக்கத்துறை நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து, அமலாக்கத்துறைக்கு எதிராக உத்தரவை பெற்றது. அதன் பெயரில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்ள இடைக்கால […]
பாதுகாப்புப் படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகானுக்கு ‘Z’ வகை ஆயுதப் பாதுகாப்பை வழங்கிய டெல்லி அரசு. நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து 9 மாதங்களுக்கும் மேலாக அப்பதவி காலியாக இருந்தது. இந்த சமயத்தில், நாட்டின் 2-வது முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் கடந்த 28-ம் தேதி நியமிக்கப்பட்டதை அடுத்து […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் பிபி மாதவன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் பிபி மாதவன்(வயது 71) மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும்,மாதவன் மீது “கிரிமினல் மிரட்டல்” வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக,பாதிக்கப்பட்ட பெண்,டெல்லி போலீசில் அளித்த புகாரில்: “பிப்ரவரி 2020 இல் என் கணவர் இறந்த பிறகு,நான் வேலை தேட […]
பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் ஒருவரை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.குற்றம் சாட்டப்பட்ட இந்திய விமானப்படை வீரரின் பெயர் தேவேந்திர சர்மா என கூறப்படுகிறது. இந்திய விமானப்படை வீரர் தேவேந்திர சர்மா,பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு இந்தியா விமானப்படை குறித்த சில தகவல்களை பரிமாறியதாக சந்தேகம் எழுந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும்,இந்திய விமானப்படை வீரரின் மனைவியின் வங்கிக்கணக்கில் சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Crime Branch of Delhi […]
ஒரு முஸ்லீம் பிரதமரானால்,50 சதவீதம் இந்துக்கள் மதம் மாறுவார்கள், 40 சதவீதம் பேர் கொல்லப்படுவார்கள் என்று யதி நரசிங்கானந்த் கருத்து. டெல்லி புராரி மைதானத்தில் நேற்று இந்து மகா பஞ்சாயத்து நடைபெற்றது.அப்போது,கூட்டத்தில் பேசிய தஸ்னா தேவி கோவில் பூசாரி யதி நரசிங்கானந்த்,முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமரானால் அடுத்த 20 ஆண்டுகளில் 50 சதவீத இந்துக்கள் மதம் மாறுவார்கள் என்று கூறினார்.குறிப்பாக,இந்துக்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்தி போராடும்படி நரசிங்கானந்த் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. 40 சதவீதம் பேர் […]
டெல்லியிலுள்ள தலைமை காவலர் ஒருவர் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விகார் என்னும் பகுதியில் 35 வயதுடைய ராகேஷ் எனும் தலைமை காவல் அதிகாரி தலையில் துப்பாக்கி வைத்து சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக காவலர் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாகவும், காவலர் ராஜேஷின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது […]
கொரோனா இரண்டாம் அலை காரணமாக டெல்லியில் மட்டும் 42 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு சில நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தற்போது தான் சற்று கொரோனாவின் புதிய தொற்றுகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவலர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். […]
கொலை வழக்கில் தேடப்பட்டு வரக்கூடிய இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற மல்யுத்த வீரர் தான் சுஷில்குமார். மே மாதம் ஆறாம் தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் மூத்த வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இளம் மல்யுத்த வீரர்களான குமார், அஜய், பிரின்ஸ், அமிர், சாகர் உள்ளிட்ட […]
ஊரடங்கை மீறிய தம்பதிகள் மீது டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து காவல்துறையினரிடம் நான் என் கணவரை முத்தமிடுவதை உங்களால் தடுக்க முடியுமா என அத்துமீறி பேசிய பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவில் தற்பொழுது உருவாகி நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன், நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் […]
கடந்த ஆண்டு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில் 1,699 கற்பழிப்பு சம்பவங்கள், 2,186 பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான 65 பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான சம்பவங்கள் டெல்லியில் பதிவாகியுள்ளதாக டெல்லி காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வழக்குகள் 2019 ஆம் ஆண்டினை ஒப்பிடும்போது குறைந்து உள்ளது. 2019 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் படி, 2,168 கற்பழிப்புகள், 2,921 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் 109 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன.டெல்லி காவல் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2020 […]
விவசாயிகள் போராட்டத்தின் போது குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டெல்லி டிராக்டர் வன்முறையில் பாதிக்கப்பட்ட போலீசார் மற்றும் குடும்பத்தினர் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாகா டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். அகிம்சை முறையில் நடைபெற்ற இந்த போராட்டம் குடியரசு தினத்தன்று வன்முறையாக சிங்கு எல்லையில் வெடித்தது. இதில் விவசாயிகளும், காவலர்களும் காயமடைந்து […]
டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் 394 போலீஸ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நேற்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசியது. இதனால் விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையாக வெடித்தது. செங்கோட்டையை முற்றிகையிட்ட விவசாயிகள், அங்குள்ள கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகளின் கொடி ஏற்றினர். பின்னர் வன்முறை தீவிரம் காரணமாக காவல்துறை தடியடி நடத்தப்பட்டது. […]
6 ஆண்களால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு துன்புறுத்தப்பட்டு, பல மாதங்களாக கற்பழிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். டெல்லியில் உள்ள கீதா களனி எனும் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக 6 ஆண்களால் 13 வயது சிறுவன் ஒருவன் துன்புறுத்தப்பட்டு, பாலியல் மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு துன்புறுத்தப்பட்டுள்ளான். அவர்களின் துன்புறுத்தலால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சிறுமியாக மாறிய அந்த 13 வயது சிறுவனை அந்த 6 நபர்களும் […]
கோவில் வளாகத்தில் ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் காவலர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், அனைத்து பள்ளி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி காவல்துறை கான்ஸ்டபிள் தான்சிங், டெல்லி செங்கோட்டையில் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் வைத்து, […]
கொரோனா தொடர்பான முறையான வழிகாட்டுதல்களை மீறியதற்காக 100 மெட்ரோ பயணிகளுக்கு அபராதம் விதிக்கபட்டது என்று டெல்லி காவல்துறை இன்று தெரிவித்தனர். மெட்ரோ நிலையங்களில் உள்ள காவல்துறையினர் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றப்படாத நபர்களை கண்டறியும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பயணிகள் சவால் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர். கடந்த நான்கு நாட்களில், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மீறியதற்காக 1,903 மெட்ரோ ரயில்கள் சோதனை செய்யப்பட்டு, 100 பயணிகளுக்கு அபராதம் […]
கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் பலரும் வேலைக்கு சென்றுவருவதாகவும், அதுதொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளதாக டெல்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (DCPCR) தெரிவித்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு கடந்த மார்ச் மாத இறுதி முதல் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி கடைகள், பள்ளிகள், என அனைத்தும் மூடப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பலரும் தங்களின் வேலையினை இழந்து, குடும்பங்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு […]
சீன நிறுவனங்களுக்கு உளவு பார்த்து தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா – சீனா இடையே தற்போது எல்லைப் பிரச்னை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுவதாகக் கூறி ‘டிக்டாக்’ உட்பட சீனாவைத் தலைமையிடமாக கொண்ட 100-க்கும் மேற்பட்ட செயலிகளை மத்திய அரசு தடை விதித்தது. சமீபத்தில் இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் தகவல்களை சீன நிறுவனமான ஷென்சென் ஷென்ஹூவா உளவு பார்த்ததாக […]
ஊரடங்கு காலத்திலும் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய பொலிஸாருக்கு நன்றி தெரிவித்த மேரிகோம். வீராங்கனை மேரிகோம் பிரபலமான குத்துசண்டை வீரர் ஆவார். இவர், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனையும், மாநிலங்களவை உறுப்பினரும் ஆவர். இந்நிலையில், மேரிகோமின் மகன் தனது 7-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். இதனையடுத்து, டெல்லி போலீஸார், மேரிகோமின் இல்லத்திற்கு வந்து பிறந்தநாளை சிறப்பித்துள்ளனர். இதுகுறித்து மேரிகோம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு, ஊரடங்குக்கு மத்தியிலும் தனது மகனின் […]
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 148 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.