கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில்,இன்று முதல் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில்,கடந்த இரண்டு தினங்களுக்கு முன்ன்னர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் கலந்துகொண்ட கூட்டத்தில் இன்று முதல் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறவும்,முகக்கவசம் அணியாமல் இருப்பதற்கான அபராதத்தை 2,000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, டெல்லி […]
நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். முழுவதும் தானியங்கி முறையில் இயங்குவதால் ஓட்டுநர் இல்லாத இந்த ரயில்களில் மனிதத் தவறுகள் களையப்படுகின்றன.மெஜந்தா மார்க்கத்தில் இந்தச் சேவை துவக்கப்பட்ட பிறகு டெல்லி மெட்ரோவின் பிங்க் மார்க்கத்திலும் 2021-ஆம் ஆண்டு மத்தியில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நாட்டின் முதல் முழுமையான (automatic) டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை 37 கி.மீ. மெஜந்தா […]
கொரோனா தொடர்பான முறையான வழிகாட்டுதல்களை மீறியதற்காக 100 மெட்ரோ பயணிகளுக்கு அபராதம் விதிக்கபட்டது என்று டெல்லி காவல்துறை இன்று தெரிவித்தனர். மெட்ரோ நிலையங்களில் உள்ள காவல்துறையினர் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றப்படாத நபர்களை கண்டறியும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பயணிகள் சவால் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர். கடந்த நான்கு நாட்களில், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மீறியதற்காக 1,903 மெட்ரோ ரயில்கள் சோதனை செய்யப்பட்டு, 100 பயணிகளுக்கு அபராதம் […]
டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30 வரை மத்திய அரசு நீடித்துள்ளது. இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. குறிப்பாக, மெட்ரோ ரயில் சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்காரணமாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள், கொரோனா தடுப்பு […]
டெல்லியில் செப். 7 முதல் மெட்ரோ சேவைகள் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. […]
அடுத்த ஆண்டில் இருந்து டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டு ஏதாவது ஒன்றை பயன்படுத்த வேண்டும். வருகிற வருடத்தில் இருந்து டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால், கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தான் பணப் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டும். கையிலிருந்து பணமாக கொடுத்து பயணம் செய்ய முடியாது. இதை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் […]