கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில்,இன்று முதல் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில்,கடந்த இரண்டு தினங்களுக்கு முன்ன்னர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் கலந்துகொண்ட கூட்டத்தில் இன்று முதல் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறவும்,முகக்கவசம் அணியாமல் இருப்பதற்கான அபராதத்தை 2,000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, டெல்லி […]
மது அருந்துவதற்கான அதிகாரப்பூர்வ வயது வரம்பை 25-ல் இருந்து 21-ஆக குறைத்த டெல்லி அரசு. இந்தியாவை பொறுத்தவரையில் பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாராமல் மதுபானத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் அவர்களது குடும்பங்கள் தான் சீரழிவை சந்திக்கின்றனர். இந்நிலையில் டெல்லி அரசு நேற்று புதிய கலால் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அவர்கள் கூறுகையில், டெல்லியில் 60% மதுபான கடைகள் அரசால் நடத்தப்பட்டு வருவதாகவும், புதிதாக மதுபான கடைகள் எதுவும் […]
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி அரசு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சார்பில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.இதைத்தொடர்ந்து இவைகள் சட்டமாக மாறின.ஆனால் இதற்கு எதிராக விவசாய அமைப்புகள் தொடர்ச்சியாக […]
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால் ரூ.1.21லட்சம் அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. காற்று மாசால் இந்தியாவில் கடந்தாண்டு 16 லட்சத்திற்கும் அதிகாமானோர் உயிரிழந்துள்ளதை அடுத்து கடும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை டெல்லி அரசு விதித்துள்ளது. வாகனங்களிலிருந்து வெளிவரும் மாசால் குழந்தைகள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். எனவே, வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசை குறைக்கவும் அறிவுறுத்தியதுடன், அரசு பிறப்பித்துள்ள மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் நொய்டாவின் நிறுவனங்கள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1.21 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கு சாலை வரி விலக்கு அளிப்பதாக போக்குவரத்து துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியின் மின்சார வாகனக் கொள்கையின் படி , பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு சாலை வரி விலக்கு அளிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லி அரசாங்கத்தின், மின்சார வாகனக் கொள்கையின் கீழ் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் மீதான சாலை வரி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக டெல்லி போக்குவரத்துத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், பதிவு கட்டணம் […]
காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லி அரசு, வரும் 15 ஆம் தேதி முதல் அனைத்து வகையான டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தளவில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகளவில் காணப்படுகிறது. இது, டெல்லியில் ஆண்டு முழுவதும் ஏற்படும் பிரச்சினையாகும். இந்த காற்று மாசு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பல வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லியில் காற்று மாசு காரணமாக நடப்பாண்டு மட்டும் 24,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் […]