தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், வாகன கட்டுப்பாடு, பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமான பணிகளுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி மாநில அரசு விதித்தது. மேலும், காற்றின் தரத்தை சற்று மேம்படுத்த ஐஐடி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களுடன் உதவியுடன் செயற்கை மழை பொழிவை உருவாக்கவும் மாநில அரசு முடிவு செய்து இருந்தது. இதற்கிடையில், டெல்லியில் இயற்கை மழை பொழிந்து ‘மிகமோசமான’ எனும் காற்றின் தரம் ‘மோசமான’ எனும் தரத்திற்கு வந்தது. […]
தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. டெல்லி அருகே உள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பயிரிடப்பட்ட பின்னர், மீதம் இருக்கும் விவசாய கழிவுகளை தீயிட்டு அழிப்பதன் காரணமாக டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக கூறி, விவசாய கழிவுகளை தீயிட்டு அழிக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடதக்கது. டெல்லியில் மற்ற மாநில […]
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் காற்று மாசு காரணமாக நவ.11-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். அதன்படி 11-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் நவ.11 வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் […]
தேசிய தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்து வருவதால் பிற மாநிலங்களில் இருந்து இயங்கும் அனைத்து டீசல் பேருந்துகளும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 30ம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் டீசல் பேருந்துகளுக்கு முழுமையான தடையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் டெல்லி அரசு செயல்பட்டு வருவதாக கூறிய கோபால் ராய், கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 397 ஆக […]
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதற்கு முன்னதாகவே டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பிற மாநிலங்களில் இருந்து வரும் டெல்லியில் இயங்கும் அனைத்து டீசல் பேருந்துகளும் நவம்பர் 1ம் தேதி முதல் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் டெல்லி அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 397 ஆக […]