மத்திய டெல்லியில் நடந்த ஒரு மோதலில் டெல்லி காவல்துறையை சார்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா தனது அசாத்திய துணிச்சலால் என்கவுன்டரில் ஈடுபட்டு பிரபல தாதாவான ரோஹித் சவுத்ரி (35) என்பவரை கைது செய்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையில் ரோஹித் சவுத்ரி (35) மற்றும் அவனது கூட்டாளியான பர்வீன் இருவரும் காலில் காயம் அடைந்தனர்.இவர்கள் பின்பு ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு இருந்து சிகிச்சையின் பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை பிரியங்கா பிடிக்க முயன்றபோது அவரை […]