டெல்லி : டெல்லியில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேகவெடிப்பினால் இந்த திடீர் மழைப்பொழிவு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கனமழை காரணமாக ராஜிந்தர் நகர், நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை, மதுரா சாலை உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதே போல புதிய நாடாளுமன்ற வளாகத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் ஒரு பகுதியில் மழைநீர் கட்டிடத்திற்கு உள்ளே ஒழுகியது. ஒழுகிய மழைநீரை வாளி வைத்து ஊழியர்கள் பிடித்துள்ளனர் […]