தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று தற்பொழுது அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், 2 டேஸ் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டவர்கள் அடுத்ததாக பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்குவதாக தற்பொழுது டெல்லி அரசு அறிவித்துள்ளது. முன்னதாக 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இந்த போஸ்டர் டோஸை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுகாதார பணியாளர்கள், முதல்நிலை ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு […]
ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என டெல்லி முதல்வர் கூறியுள்ளார். உருமாறிய கொரோனா வைரஸின் புதிய வகையான ஓமைக்ரான் வகை தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 50 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. அதிலும் இந்தியாவிலும் இந்த ஓமைக்ரான் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தலைநகர் டெல்லியில் இரண்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதிய வகை வைரஸ் ஓமைக்ரானை எதிர்கொள்ள […]
டெல்லி:காற்று மாசுபாட்டைக் குறைக்க வாகன நிறுத்த கட்டணங்களை நான்கு மடங்கு உயர்த்தலாம்,மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்கலாம் என்று டெல்லி அரசு பல்வேறு யோசனைகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் அதற்கு முக்கிய காரணம் தூசி, கனரக வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே,அதனைக் குறைக்க 3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்,டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு […]
தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு பணிக்கு வர அனுமதி மறுக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தொடர்ந்து பரவி கொண்டே தான் இருக்கிறது. அவ்வப்போது குறைந்து வந்தாலும் சில சமயங்களில் கொரோனா பரவல் அதிகரித்து விடுவதால் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்தும் மக்களை ஊக்குவிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. […]
8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆஃப்லைன் தேர்வுகள் இருக்காது என்றும் ஒர்க்சீட் மற்றும்அசைன்ட்மென்ட் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. நர்சரி 2 ஆம் வகுப்பு முதல் தற்போதைய மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள். கேஜி முதல் 2 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குளிர்கால இடைவேளையின் ஒர்க்சீட் மற்றும் அசைன்ட்மென்ட் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு புதிய விதிமுறைகளை டெல்லி அரசு பிறப்பித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். இதுவரை தலைநகரான டெல்லியில் 29,004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 650 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதாகவும், சிலரை பார்க்காமல் திருப்பி அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் கூட […]
டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் பெண்களுக்காக புதிய போக்குவரத்து திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.அதில், டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இலவச பயணத்தை விரும்பாத பெண்கள் டிக்கெட் வாங்கி பயணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். […]
பருவ காய்ச்சலை தடுக்கும் வகையிலும் ,பன்றிகளில் உள்ள H1N1 வைரஸ் வகைகளால் உருவாகும் பன்றி காய்ச்சலை தடுக்கும் வகையில் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என டெல்லி மாநில சுகாதாரதுறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது அம்மாநில அரசு. பன்றி காய்ச்சலின் அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், புண், தொண்டை, பலவீனம் மற்றும் உடல் வலிகள் ஆகியவை அடங்கும். குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோரை இக்காய்ச்சல் உடனடியாக கடுமையான தொற்றும் அபாயம் உள்ளது. இந்த பன்றிக்காய்ச்சலுக்கு வழக்கமான சிகிச்சை ஓய்வு, […]