புதுச்சேரியின் தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் ஐஏஎஸ் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் வர்மா ஐஏஎஸ் புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வரும் நிலையில் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். அதைப்போல,டெல்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைவர் தர்மேந்திரா ஐஏஎஸ் அருணாச்சல பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதைப்போல,அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் […]