டெல்லி : புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜுவ்குமார் நேற்றுடன் பணி நிறைவு செய்தார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து அவரை வரவேற்றார். ஞானேஷ்குமாரின் நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்க உள்ளது […]