இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து தங்கள் போர் திறன்களை அதிகரிக்க உருவாக்கிய நடுத்தர-தூர மேற்பரப்புக்கு ஏவுகணை (எம்.ஆர்.எஸ்.ஏ.எம்) பாதுகாப்பு அமைப்பின் வெற்றிகரமான சோதனையை நடத்தியுள்ளன. இந்தியாவும், இஸ்ரேலும் கடந்த வாரம் ஒரு நடுத்தர தூர மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணை (எம்.ஆர்.எஸ்.ஏ.எம்) பாதுகாப்பு முறையை வெற்றிகரமாக சோதித்தன என்று இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் (ஐஏஐ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் இணைந்து உருவாக்கிய பாதுகாப்பு அமைப்பு 50-70 கி.மீ தூரத்தில் உள்ள எதிரி விமானங்களை தாக்க முடியும் எனவும் […]