மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக வழக்கறிஞர் தீபிகா கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழக்கறிஞராக வாதடி வருபவர் தீபிகா சிங். இவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையில் புகைப்படத்தை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சர்ச்சையான புகைப்படத்தை பகிர்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகிறது. மேலும் அவரை கைது செய்ய வலியுறுத்தி சமூக வலைதளங்களில் #ShamelessDeepika ஹேஷ்டேக்குகள் ட்ரண்டாகி வருகிறது.