இந்தியாவில் கொரோனா வைரஸ் வேக பரவி வருகிறது. கொரோனா வைரசால் பல அமைச்சர்கள், தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா காங்கிரஸ் எம்.பி தீபேந்திர சிங் ஹூடாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், எனக்கு கொரோனா பரிசோதனை முடிவில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைகளின்படி தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.