விளையாட்டு துறையில் உயரிய விருதாக இந்திய அரசால் வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்துக்கான விருதுக்கான பரிசீலனை இரண்டு நாட்களாக டெல்லியில் நடைபெற்றது. அந்த விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி தீபா மாலிக் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.