தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்,காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: “வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.அதன்படி,தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 760 கிமீ தொலைவில் […]
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தற்பொழுதும், வங்கக்கடலில் உருவாகியிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.