விமான டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது இந்திய விமானப்படையில் உள்ள 10% வான்வெளி பாதையை பயணிகள் மற்றும் வணிக விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் அனுமதி மூலமாக விமான நேரம் குறைப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பு போன்ற விமானத்தின் செயல்பாட்டு செலவும் குறையும். இதன் காரணமாக விமான கேரியர்களுக்கு பெரும் தொகைகளை குறைந்த நேரத்தில் ஈட்டித்தரும் என்பதால் விமான டிக்கெட் கட்டணம் குரைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.