புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்போது , எங்கு , எப்படி என்பதை ராணுவ வீரர்களே முடிவு செய்து கொள்ளலாம். புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானிடம் எந்த ஆதாரத்தையும் கொடுக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. […]
ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை 526 கோடி ரூபாயாக நிர்ணயிக்குப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறினார். ஆனால், பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று வந்த பிறகு, ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த விலைக்கு […]