இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநராக அறிமுமகாகும் படம் ‘சவரக்கத்தி’. இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா நடிக்கும் இப்படத்தில் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லோன் வோல்ப் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கோரெலி இசையமைத்திருக்கிறார். கிராம பின்னணியில் உணர்ச்சிப்பூர்வமான த்ரில் கதையாக உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.