கோவை : கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இரட்டை ஆணவ படுகொலை வழக்கில் இன்று குற்றவாளி வினோத் குமாருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. வினோத் குமாரின் தம்பி கனகராஜ் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா ஆகியோரை வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக வினோத் குமார் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]
கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் அங்கு தன்னார்வலராக பணிபுரிந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். முதலில் கொல்கத்தா நகர போலீசார் விசாரணை செய்து வந்த இந்த வழக்கானது நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு சிபிஐ வசம் மாறியது. சிபிஐ வழக்கு விசாரணை தொடர்ந்து சஞ்சய் ராய் குற்றவாளி என […]
சென்னை : கடந்த 2022-ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற இளைஞர் சத்யபிரியா என்ற மனைவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக சதீஷை காவல்துறையினர் கைதும் செய்தனர். அதன்பின் அவரிடம் நடந்த விசாரணையில், தன்னுடன் பேசியதை நிறுத்தியதால் மாணவி சத்யபிரியாவை, தான் ரயில் முன்பு தள்ளி சதீஷ் கொலை செய்தார் என்கிற பரபரப்பான தகவலும் வெளியாகி இருந்தது. முதலில் இந்த வழக்கை தமிழக காவல்துறை […]
கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்து ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாரா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில தலைவரும், வழக்கறிஞருமான ரஞ்சித் ஸ்ரீனிவாசன், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி காலை ஆலப்புழா நகராட்சி வெள்ளக்கிணற்றில் உள்ள தனது வீட்டில் மிககொடூரமான […]
சென்னையில் தாம்பரம் அடுத்து பம்மல் நந்தனாா் தெருவைச் சோ்ந்த தாமோதரன் என்பவர் ஜவுளி கடை வியாபாரத்தில் நஷ்டப்பட்டதால், கடந்த 2017-ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து, தனது மனைவி தீபா, தாய் சரஸ்வதி மட்டுமின்றி ரோஷன், மீனாட்சி எனும் இரு குழந்தைகள் ஆகியோரை கொலை செய்து விட்டு, பின்னர் மாமனாருக்கு தகவல் அளித்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தீபாவின் தந்தை பாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் தாமோதரன் […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து, ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி நகருக்கு உட்பட்ட பூட்டி பாஸ்தீ (Booty Basti) என்ற இடத்தில், கடந்த 2016-ம் ஆண்டு, வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த அந்த பொறியியல் கல்லூரி மாணவி, அதே வீட்டில், பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்நிலையில், […]
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சார்ந்த பிரவீன் இவர் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி 9 மாத குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பொதுமக்கள் பிரவீனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்ந்து பிரவீன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு வாரங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த போது பிராவின் பிரவீன் மதுபோதையில் செய்து விட்டதாக குற்றத்தை […]