ஜம்மு–காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக அங்கு நடந்த மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தலில் (டி.டி.சி) , 74 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா ஒற்றை மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது.தேசிய மாநாடு (என்.சி) 67 இடங்களை வென்றுள்ளது, அதே நேரத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) 27 இடங்களைப் பெற்றுள்ளது. என்.சி மற்றும் பி.டி.பி ஆகியவற்றை உள்ளடக்கிய குப்கர் கூட்டணி மொத்தம் 110 இடங்களை வென்றுள்ளது.