சென்னை: கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவின் கேன்சர் நோய் மருந்துகளை திரும்ப பெற இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழுமம் (DCGI) முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளில் பிரதானமாக இருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அண்மையில், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில், கோவிஷீல்டு தடுப்பூசி மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவு ஏற்படுத்தலாம் என ஒப்புக்கொண்டது உலகளவில் பெரும் சர்ச்சையானது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து இதே ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரிக்கும் கேன்சர் மருந்து […]
மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி. மூக்கு வழியே செலுத்தும் நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு (DCGI) அனுமதி அளித்துள்ளது. ஊசிக்கு பதிலாக மூக்கு வழியே செலுத்தும் வகையில் நவீன கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. பிபிவி 154 என்ற பெயர் கொண்ட தடுப்பு மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. […]
6-12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல். இந்தியாவில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு DCGI (Drugs Controller General of India) ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்க கூடிய நிலையில், தற்போது அவசர கால பயன்பாடாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் […]
இந்தியாவின் பயோடெக் நிறுவனத்தின் நாசி தடுப்பூசி பரிசோதனைக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) அனுமதி அளித்துள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் தனது நாசி தடுப்பூசிக்கான 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு DCGI இன் ஒப்புதலை கடந்த மாதம் கேட்டிருந்தது. பயோடெக் நிறுவனம் ஏற்கனவே மூன்று வாரங்களுக்கு முன்பு DCGI நிபுணர் குழுவிற்கு நாசி தடுப்பூசி பற்றிய தரவுகளை அனுப்பி இருந்தது. இந்நிலையில், இந்தியாவின் பயோடெக் நிறுவனத்தின் நாசி தடுப்பூசி பரிசோதனைக்கு […]
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. இதன்பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் […]
12 லிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் செலுத்த ஒப்புதல் இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது. அதில், 2 முதல் 8 வரை , 8 முதல் 14 வரை, 12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் […]
கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் (virafin) விராஃபின் மருந்தை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. மருந்து எடுத்துக் கொண்ட 7 நாட்களில் பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா நெகட்டிவ் என இருந்தது என்று கூறப்படுகிறது. இந்த பரிசோதனை 91.15 சதவீத நோயாளிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்ட லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஸைடஸ் […]