ஊரடங்கு முடிந்த பின்னர் தேர்வு வைத்து கொள்ளலாமே.! நடிகர் விவேக்கின் டுவிட்.!

ஊரடங்கு முடிந்த பின்னர் தேர்வு வைத்து கொள்ளலாமே.! நடிகர் விவேக்கின் ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட ஊரடங்கு தேர்வுகள் வரும் ஜூன் 1 தொடங்கி 12 வரை நடைப்பெறும் என்று பள்ளி கல்வி அமைச்சரான செங்கோட்டையன் அறிவித்திருந்தார். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி செய்து கொடுப்பது மட்டுமில்லாமல் தனிமனித இடைவெளியை பின்பற்றி தேர்வு நடைபெறும் என்று கூறியிருந்தார். இந்த முடிவால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சில சமூக ஆர்வலர்கள் இந்த தேர்வை தள்ளி வைக்க கோரி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது நடிகர் விவேக் இது குறித்து கூறுகையில், பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பொற்றோருக்கும் பெரும் மன இறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் தேர்வை வைத்து கொள்ளலாமே. பள்ளி கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவரது டுவிட்டுக்கு பலர் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.