சென்னை: அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024இல் தமிழகத்துக்கு என்று தனியாக சிறப்பு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவை இல்லை. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்பி தயாநிதி மாறன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை […]
டெல்லி: திமுக எம்பி தயாநிதி மாறன் இன்று நாடளுமன்றத்தில் விமான டிக்கெட் உயர்வு குறித்து மக்களவையில் கோரிக்கை முன்வைத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 23இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதற்கடுத்தடுத்த நாட்களில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள். இன்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், […]
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்து வாக்குவாதம் செய்த ரிசர்வ் வங்கி பணியாளர்கள் குறித்து திமுக எம்.பி. தயாநிதிமாறன் கருத்து. சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் […]
நீட் தேர்வுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதே மாணவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய தயாநிதிமாறன், நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறார். நகரத்தில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு படித்துக் கொள்ளலாம். ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் வகுப்பு படிக்க முடியாது என்றும் தங்களை தயார் செய்துகொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். இதில் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் […]
திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீதி ஜூன் 10 ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம். ஏற்கனவே மே 29 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட […]
திமுக எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மேலும் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறநின் மனுக்களை அவசர வழக்காக பிற்பகலில் நீதிபதி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகிய இருவர் மீது மே 29 வரை எந்தவித கடுமையான […]
திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல். தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறநின் மனுக்களை அவசர வழக்காக பிற்பகலில் நீதிபதி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறி கோவையை சேர்ந்த சேகர் என்பவர் புகார் அளித்துள்ளார். சேகரின் புகாரால் கோவை வெரைட்டி காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது […]
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றார். தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். ‘கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவுறுத்தியபடி, கொரோனா தடுப்பு & பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.மேலும் கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். பின் கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் […]
சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், 3 திட்டங்களை முன்வைத்தார். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை, 60 வயத்துக்கு கீழ் இருப்போருக்கு வாய்ப்பு மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு வாய்ப்பு என கூறினார். இதையடுத்து மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று தெரிவித்தார். மேலும் ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார். ரஜினியின் பேச்சிக்கு பலரும் பாராட்டும் விமர்சனமும் […]
மத்திய அரசின் திறந்தவெளி இல்லா கழிப்பிடம் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்தபின் தயாநிதிமாறன் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், ரயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து மனு அளித்தோம் .கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டோம். மத்திய அரசின் திறந்தவெளி இல்லா கழிப்பிடம் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.தனியார் ரயில்களை அனுமதித்தால் டிக்கெட் கட்டணம் உயரும், இது தொடர்பாக ரயில்வே அமைச்சரை சந்தித்து வலியுறுத்த […]
சுவிஸ் வங்கி அறிக்கை வெளியாவதாக சொல்லியே பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது என்று திமுக எம் .பி. தயாநிதி மாறன்தெரிவித்துள்ளார். சென்னை சவுகார் பேட்டையில் பொது கூட்டம் ஓன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,திமுக எம் .பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம் .பி. தயாநிதி மாறன், சுவிஸ் வங்கி அறிக்கை வெளியாவதாக சொல்லியே பா.ஜ.க. 5 […]
தெற்கு ரயில்வே பொது மேலாளருடன் திமுக எம்.பி. தயாநிதிமாறன் சந்தித்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தொகுதிக்கான ரயில் திட்ட பணிகள், ரயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தேன். யானைகவுனி – வில்லிவாக்கம் ரயில்வே மேம்பால பணி 3 மாதங்களில் தொடங்கும் .புறநகர் ரயில் நிலையங்களில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.காஷ்மீரில் அனைத்து தலைவர்களும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
நேற்று மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டார்.இதன் பின்னர் 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.நேற்று எம்.பி.கள் பதவி ஏற்ற நிலையில் இன்றும் எம்.பி.கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் இன்று தமிழில் ஜெயக்குமார், கலாநிதி வீராச்சாமி, தமிழச்சி தங்கபாண்டியன் , தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.அப்போது வாழ்க தமிழ் , வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என்று தயாநிதி மாறன் கூறினார்.