லடாக்: இந்திய ராணுவ எல்லையான லடாக், தௌலத் பேக் ஓல்டி பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்திய ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது டி-72 ரக ராணுவ டேங்க் உடன் அப்பகுதி ஆற்றை கடக்க ராணுவ வீரர்கள் முயற்சித்துள்ளனர். அந்த சமயம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் துரதிஷ்டவசமாக ராணுவ டேங்க் வெடித்ததில் அதில் இருந்த ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவ வீரர்கள் என 5 பேர் உயிரிழந்தனர் என […]