மாமியாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், பயத்தில் கிணற்றில் குதித்து மருமகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதிலும் அதிகரித்து வந்தாலும் தற்பொழுது ஒவ்வொரு இடங்களில் அதன் தீவிரம் மற்றும் வீரியம் சற்று குறைந்து உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் சிலர் தங்களது உயிர் மீது ஆசை பட்டு, பயத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது முட்டாள்தனம் தான். ராசிபுரத்தில் அண்மையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனை மூலமாக உறுதி செய்யப்பட்டது. […]