Tag: DASMARK

நாளை முதல் சென்னையில் விதிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் திறப்பு!

நாளை முதல் சென்னையில் விதிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. சென்னையில் கொரோனா வைரஸ் காரணமாக அதிகம் பரவல் உள்ள இடமாகிய பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை திறக்கப்படாமல் இருந்த மதுபான கடைகள் நாளைமுதல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நோய் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மதுபான கடைகள் இயங்காது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடைகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் மதுக்கடையில் கிரில் பகுதிக்கு வெளியே […]

coronavirustamilnadu 5 Min Read
Default Image

தமிழக அரசுக்கு பொதுநலன் இல்லை – டாஸ்மார்க் திறப்பை வைத்து சாடிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!

டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் எதுவும் இல்லை என உயர்நீதிமன்ற கிளை விமர்சனம் செய்துள்ளது. கொரானா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக மதுக்கடைகளும் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் அண்மையில் மதுக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு சாராயமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி அன்னை சத்யா நகர் பகுதியில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டி […]

#Corona 4 Min Read
Default Image

ஹோட்டல்கள் மற்றும் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கும் அரசு தட்டச்சு பயிற்சி மையத்தை திறக்க அனுமதிக்காதது ஏன்?

டாஸ்மாக் கடைகள் மற்றும் ஹோட்டல்களை திறக்க அனுமதித்திருக்கும் பொழுது, தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்தது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. கொரானா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், தட்டச்சுப் பயிற்சி மையங்கள், கணினி மையங்கள், ஹோட்டல்கள், ரயில்கள், விமானப் போக்குவரத்து என அனைத்துமே மூடப்பட்ட […]

#Corona 4 Min Read
Default Image

ஜனவரி 8.,9.., டாஸ்மாக் மூடல்..!அறிவித்தது வேலைநிறுத்த போராட்டம்..!

டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. ஜனவரி 8,9 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து தெரிவிக்கையில் பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநரிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் தரப்பட்டடுள்ளது குறிப்பிடத்தக்கது.

#Strike 2 Min Read
Default Image

டாஸ்மார்க் ஊழியருக்கு தகுதி தேர்வு..!!அமைச்சர் தங்கமணி..!!

டாஸ்மாக் ஊழியர்கள் 500 பேருக்கு எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் அதுவே அரசின் கொள்கை” என தெரிவித்த அமைச்சர் தங்கமணி டாஸ்மாக் ஊழியர்கள் 500 பேருக்கு அவர்களின் படிப்புக்கு ஏற்ற வேலைஅடுத்த மாதம்  வழங்கப்படும். இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெறும் என கூறினார். தமிழக அரசு சார்பில் மூடப்பட்ட 500 டாஸ்மார்க்கின் ஊழியர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

#ADMK 2 Min Read
Default Image