குஜராத் அரசை பாராட்டிய கேரள தலைமைச் செயலாளர் விபி ஜாய் …!
கேரள சிறப்பு பணி அதிகாரி, கேரள தலைமை செயலாளர் விபி.ஜாய் உள்ளிட்ட அதிகாரிகள் குழு குஜராத்துக்கு சென்றுள்ளனர். இவர்களது வருகையை கேரளாவில் உள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் காட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், கேரளா தலைமைச்செயலாளர் குஜராத் மாநிலம் காந்தினரில் உள்ள முதல்வர் பூபேந்திர படேலின் அதிகாரபூர்வமான இல்லத்தை பார்வையிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், முதல்வரின் டாஷ்போர்டு திட்டம் அரசு சேவைகளை கண்காணிக்கவும், பயன் பெறுபவர்களிடமிருந்து கருத்துக்களை பெறுவதற்கும் நன்கு உதவுகிறது என தெரிவித்துள்ளார். […]