இந்தியாவில் 81.5 கோடி ஆதார் அட்டை பயனர்களின் தரவு டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டார்க் வெப் மூலம் இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் விற்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரீசெக்யூரிட்டியின் அறிக்கையின்படி, 815 மில்லியன் இந்தியர்களின் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் டார்க் வெப்பில் ( $80,000) விற்பனைக்கு வந்துள்ளன. அதாவது, டார்க் வெப்பில் பெயர்கள், தொலைபேசி […]
1.5 லட்சம் தமிழ்நாடு மருத்துவமனை நோயாளிகளின் தரவுகளை ஹேக்கர்கள் திருடி டார்க் வெப்பில் விற்பனை. நாட்டின் மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதான கம்ப்யூட்டர் (சர்வர்) கடந்த 23-ம் தேதி திடீரென முடங்கியது. ரான்சம்வேர் எனப்படும் வைரஸ் மூலம் ஹேக்கர்கள் நடத்திய கைவரிசையால் சர்வர் செயலிழந்து விட்டது. இந்த முடக்கத்தை விடுவிப்பதற்கு ரூ.200 கோடி கிரிப்டோகரன்சியில் தர வேண்டும் என ஹேக்கர்கள் மிரட்டலும் விடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்த முடக்கத்தால் மருத்துவமனையில் ஏராளமான பணிகள் […]
டார்க் வெப்பில் 100 மில்லியனுக்கும் அதிகமான நபர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விபரங்கள் மற்றும் சில முக்கியமான தகவல்கள் கசிந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். டார்க் வெப் தளத்தில் சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான நபர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விபரங்கள் மற்றும் சில முக்கியமான தகவல்கள் டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜஹாரியா தெரிவித்தார். இதில் பயனர்களின் பெயர், போன் நம்பர், ஜி-மெயில் ஐடி, டெபிட், கிரெடிட் கார்டுகளில் உள்ள எண்கள் ஆகியவை […]
பல முன்னணி நிறுவனங்களின் CEO, CFO மற்றும் CMO உள்ளிட்டோரின் மைக்ரோஃசாப்ட் இ மெயில் ஐடியை பாஸ்வேர்டுடன் $100-$1,500 (இந்திய மதிப்பின்படி ரூ.7,400 முதல் ரூ.1.1 லட்சம்) வரை ஹேக்கர் ஒருவர் விற்பனை செய்துள்ளது, பலரை அதிர்ச்சிக்குளாகியது. உலகளவில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களின் CEO, CFO மற்றும் CMO உள்ளிட்டோரின் மைக்ரோஃசாப்ட் இ மெயில் ஐடியை பாஸ்வேர்டுடன் டார்க் வெப்பில்ஹேக்கர் ஒருவர் ரூ.7,400 முதல் ரூ.1.1 லட்சம் வரை விற்பனை செய்து வருகிறார். இதுதொடர்பாக ZDNet […]