தனுஷ்கோடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தனுஷ்கோடி கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 1964 ம் ஆண் டு டிசம்பர் 22-ம் தேதி இரவில் வீசிய கடும் புயலால் தனுஷ்கோடி நகரமே அடியோடி அழிந்தது. அங்குவாழ்ந்த மக்கள் நீரில் மூழ்கி இறந்தனர். பயணிகள் ரயில் ஒன்றும் கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த கோர சம்பவத்தை நினைவுகூறும் வகையில், உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தனுஷ்கோடி கடற்கரையில் ஏராளமானோர், கடலில் மலர்தூவி, […]
1964ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாவில் உருவாகிய புயல் தனுஷ்கோடியை தாக்கி அழித்தது. கொடுங்கனவாக பார்க்கப்படும் இந்நிகழ்வின் 54ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. துறைமுகம், ரயில்நிலையம், தலைமை தபால் நிலையம், 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் என ராமேஸ்வரம் தீவின் முக்கிய பகுதியாக விளங்கியது தனுஷ்கோடி. துறைமுகம் வரை பயணிகள் ரயில் செல்லும் வகையில் அப்போதே அமைக்கப்பட்டிருந்தது. இது எல்லாம் 1964, டிசம்பர் 26ஆம் தேதிக்கு முந்தைய காட்சிகள். இப்படி பரபரப்பாக இயங்கி வந்த தனுஷ்கோடியையும் […]