அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்பது என் எண்ணம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சு. துறை வாரியான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்கு இன்று மீண்டும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று நீர்வள துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தடுப்பணை கட்டுவதில் திமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 1,000 […]
தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள், ஓடைகளின் குறுக்கே பணைகள் அமைக்க திட்டம் என நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல். விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் ஆறுகள், ஓடைகளின் குறுக்கே சாத்தியமுள்ள இடங்களில் தொடர் தடுப்பணைகள் அமைக்க திட்டம் உள்ளதாகவும் முதல் கட்டமாக காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆறுகளின் குறுக்கே கதவணைகள் அமைக்க உத்தேசம் என நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மேகதாது அணையை கர்நாடகா கட்ட முயற்சிப்பதை தமிழக […]
கன்னியாகுமரியில் விடிய விடிய பெய்த மழையால், அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு. கடந்த சில காலங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தற்போது பருவமழை துவங்கியுள்ள நிலையில், அங்கங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக இரணியில் 9 செ.மீ. குருந்தன்கோடு, நாகர்கோவில், மாம்பழத்துறையாரில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.